ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackStalin; காரணம் என்ன
பாஜகவும், அதிமுகவும் கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் பாதிப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆளும் திமுகவால் தமிழகத்தின் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இப்பகுதியில் இன்று தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், #GoBackStalin ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
‘கொங்கு பெல்ட்’ என்று அழைக்கப்படும் தமிழகத்தில் மேற்கு பகுதி அஇஅதிமுக (AIADMK) கோட்டையாகும், இந்த பகுதி ஆளும் திமுகவுக்கு எதிராக வாக்களித்தது. கோவை, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். கொங்கு மண்டலத்தில் தொழில்துறை மையம் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்திற்கு சென்னையை விட மிகக் குறைந்த அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவையில் இப்போது தமிழகத்திலேயே அதிகபட்ச கோவிட் -19 பாதிப்புகள் உள்ள நகரமாகவும் உள்ளது.
பாஜகவும், அதிமுகவும் கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் பாதிப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஒரு தமிழ் தொலைக்காட்சி விவாதத்தின் போது, திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவர், பாஜக (BJP) செய்தித் தொடர்பாளரிடம் “கோவையில் மக்கள் சிரமப்பட்டு வேதனையுடன் அழுகிறார்களானால், அவர்கள் மோடியிடம் தான் முறையிட வேண்டும் என வேண்டும்” என்று கூறினார். அவர்கள் அழுதால், அதை மோடிக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் ” என கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு அனைவருக்குமான ஆட்சியாக இல்லாமல், வாக்களிக்காதவர்களுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பது போன்ற அவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இன்று #GoBackStalin என்ற ஹேஷ்டேக் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்வீட்களுடன் ட்ரெண்ட் ஆனது, ஒரு தமிழக முதல்வர் தனது சொந்த மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது இவ்வாறு ட்ரென் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதை எதிர் கொள்ளும் வகையில், #Welcome_TNCM_Stalin, #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி முதலமைச்சர் பிபிஇ சூட் அணிந்த வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டு திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர்.
அக்டோபர் 2020 இல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ராமநாதபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகவாதியான முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போதும், #GoBackStalin ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் திமுகவிற்கும், தேசியவாதம் மற்றும் ஆன்மீகவாதியான தேவரின் கொள்கைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினர்.
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்திற்கு வரருகை தந்த போது, #GoBackModi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன.
தற்போது, தமிழகம் தினமும் சுமார் 31,000 கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகிறது. அதேசமயம் தினசி குணமடைபவர்களின் எண்ணிக்கை 30,000 ஆக உள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கோவிட் -19 தொற்றி பாதிப்புகள் தமிழகத்தில் பதிவாகின்றன.
கடந்த சில நாட்களாக தினசரி பச்திவாகும் இறப்பு எண்ணிக்கை 450-க்கும் அதிகமாக உள்ளது. 23,000 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுநோயால் உயிர்களை இழந்துள்ளனர். மாநிலத்தில் சிகிச்சையில் தலைநகரான சென்னையில் பதிவாகும் தொற்று பாதிப்பு ஏறக்குறைய 7,000 -திலிருந்து 2,500 ஆக குறைந்துவிட்ட நிலையில், கோயம்புத்தூரில் தினசரி தொற்று பாதிப்புகள் 4,700 ஆக உள்ளன.
ALSO READ | COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR