COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2021, 09:55 AM IST
  • சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.
  • மே 24 முதல் முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது.
COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..! title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் மொத்த தொற்றின் அளவு சிறிது குறைந்துள்ள மோதிலும், சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா பரவல் மொத்த எண்ணிக்கை குறைந்து வரும் போதிலும், கோவை (Coimbatore) மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 24 முதல் முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  தளர்வுகள் இல்லாத ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த கோவை திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்.
நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இரவு கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் ஈரோடு சென்றார். 

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை உள்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரென்சிங் மூலம் கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். 

சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 30,016 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 486 பேர் இறந்தனர். இன்றைய தொற்று பாதிப்புடன் இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,261 என்ற அளவை எட்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று 31,759 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,10,157 ஆக உள்ளது.

ALSO READ | கொரோனா மருந்து DRDO 2-DG: விலை விபரத்தை வெளிட்டது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News