தங்கம் விலை சற்றே குறைவு, பொதுமக்களுக்கு ஆறுதல்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் புதன்கிழமை சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. பல பெரிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ரஷ்யா உக்ரைன் போரின் துவக்கம் முதலே தங்கத்தின் விலையில் அதிக ஏற்றம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம்.
மேலும் படிக்க | நாளை பெட்ரோல் விலை என்ன ஆகுமோ! கலக்கத்தில் மக்கள்
அதன்படி கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4815- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38520-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41712-க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,600-க்கு ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.70.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,800 ஆக உள்ளது. முன்னதாக நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.30-க்கு விற்பனையானது.
மிஸ்டு கால் கொடுத்து தங்கத்தின் விலையைக் கண்டறியவும்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை வீட்டில் இருந்தே எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு 8955664433 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் போனுக்கு மெசேஜ் வரும். சமீபத்திய கட்டணங்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | Gold Rate: தகதகவென உயரும் தங்கத்தின் விலை, ஏற்றமே தொடரும் என எச்சரிக்கும் நிபுணர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR