சென்னை: அரசு பணியாளர்களுக்கான ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளும், அது தொடர்பான சம்பள உயர்வு அல்லது சம்பள உயர்வு இல்லை என்ற செய்திகள் அதிகமாக புழங்கும். ஆனால், மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் அகவிலைப்படியிலும் வித்தியாசம் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளது முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது. ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மாநில அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு பணியாளர்களுக்கு கொடுப்பது போன்றே சம்பளம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அதிர்ச்சி, ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காதா 


அதில், 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, 1.1.2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது, இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 1.7.2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும் போது 1.1.2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 1.7.2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.


அதே சமயத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவிகிதத்தில் இருந்து 31 விழுக்காடாக 1.1.2022 முதல் தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 1.1.2022 முதல் ஆறு மாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது.


தற்போது 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31.3.2022 அன்றே அறிவித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: டிஏ அதிகரிப்பை தொடர்ந்து உயரும் பிற கொடுப்பனவுகள்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.


இந்த வி‌ஷயத்தில் ஆளும் திமுக அரசு அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம் காலம் தாழ்த்தியதைப் போல் இந்த முறையும் தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.


கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படி உயர்வையாவது 1.1.2022 முதல் 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2022 முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக, அதாவது 3 விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR