கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலக நாடுகள் தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றின் பல்வேறு மாறுபாடுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார பேரிடராக அறிவித்துள்ளது. 


இந்த அடிப்படையில், தமிழக அரசும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்றை அளித்துள்ளது. பொது சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு கோவிட்-19 தொற்றை பட்டியலிடப்பட்ட நோயாக அறிவித்தது. இதனை அரசு அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.


கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அளவு குறைந்திருந்தாலும், இதன் பாதிப்புகள் முழுமையாக இன்னும் முடிவடையவில்லை. இந்த நோய்த்தொற்றின் தாக்கத்தையும் விளைவையும் கருத்தில் கொண்டு, கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கான ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. 


இதுமட்டுமல்லாமல், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எளிய வழியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வழங்கியுள்ளது. 


மேலும் படிக்க | திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது: தேர்வுத்துறை அதிரடி


கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், அவரவர் வசதி மற்றும் இடம் கிடைப்பதற்கு ஏற்ப பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், சிகிச்சையில் ஏற்படும் மருத்துவமனைக் கட்டணத்தை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்க உத்தரவிட்டுள்ளது மக்களுக்கு பெரிய அளவிலான நிவாரணத்தை அளித்துள்ளது.  


இதைத் தொடர்ந்து, ரூ.1 கோடியை சுழல் நிதியாக, கூடுதல் சிகிச்சை செலவினத்திற்காக அரசு வெளியிட்டுள்ளது. நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சைக்கான செலவு ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகரித்தால், அதை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கொரோனா நோய்த்தொற்றால், தொழில், வேலை, வர்த்தகம் என அனைத்து தரப்பிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நிதி உதவி மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 


மேலும் படிக்க | தமிழக தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி; எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR