நவம்பர் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!
சுகாதார நிபுணர்களுடனான சந்திப்பின் அடிப்படையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவிட் -19 லாக்டவுன் நடவடிக்கைகளில் மேலும் பலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: சுகாதார நிபுணர்களுடனான சந்திப்பின் அடிப்படையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவிட் -19 லாக்டவுன் நடவடிக்கைகளில் மேலும் பலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் அனைத்து வணிக இடங்கள், நிறுவனங்கள், கடைகள், இரவு 11 மணிக்கு மேல் செயல்பட உடனடி அனுமதி கொடுக்கப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல, சிகிச்சை நோக்கங்களுக்காக நீச்சல் குளங்கள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனிப்பட்ட வகுப்புகள் மீண்டும் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா அரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கும் அனுமதி கொடுத்துள்ள தமிழக அரசு, பெரிய அரங்குகளில் கலாச்சார நிகழ்வுகளுக்கான பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்துவிட்டது.
ALSO READ | பல்வேறு தளர்வுகளுடன் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு
மேலும், கேரளாவைத் தவிர பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் 100 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, பாதுகாப்பு பெற்றவர்கள் என உறுதி செய்து கொண்ட பிறகு, அவர்களை பணியமர்த்தி, திரைப்படங்களுக்கான படபிடிப்புகளைத் தொடங்கலாம். அதோடு, சினிமா தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்களை பணியமர்த்தி செய்துக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கிவிட்டது.
இருப்பினும், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Also Read | அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்படும் விஜய் மற்றும் ரஜினியின் படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR