தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பின் முக்கிய சில அம்சங்கள் பின்வருமாறு:
- தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட முடியும் என்றிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.
- நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் ஏசி பொது பேருந்து போக்குவரத்து 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ:ரேஷன் கடைகளில் பனை வெல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு செய்தி!!
- தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் நவம்பர் 1ம் தேதி முதல் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு போட்டிகள், பயிற்சிகள் ஆகியவற்றை நடத்தவும் அனுமதி அளிக்கப்படுகின்றது.
- சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 1 முதல் கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கடைகள், உணவகங்கள் ஆகியவை இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட முடியும் என இருந்த நேரக்கட்டுப்பாடு நீக்கப்படுகின்றது.
- ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு தற்போது உள்ள தடை தொடர்கிறது.
- நவம்பர் 1 முதல் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன், (அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்) அனைத்து வகையான படப்பிடிப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.#TNLockdownextended #TNLockdown pic.twitter.com/dar3eyFgn1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 23, 2021
ALSO READ: நவம்பர் 1 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR