Tamil Political Gossip News  : கடந்த சில வாரங்களாக டூர் போய்விட்டு தலைநகரத்துக்கு திரும்பிய குசும்பன், டீ மாஸ்டரை நேராக சந்திக்க சென்றான். இவனுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டருக்கும் குசும்பனை பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி தெரிய, சூடான டீயை போட்டுக்கொடுத்து வரவேற்றார். " அண்ணே! டூர் போய்ட்டு வந்துட்டேன், இப்போ தான் பிரெஷ்ஷா இருக்கு. ஏதாவது சேதி இருக்கா?" என குசும்பன் கேட்க, "இல்லாமலா இருக்கும், அதெல்லாம் நெறைய இருக்குப்பா, வாரிசு நடிகரோட மூவ்மென்டுகளுக்கு சூரிய கட்சி பெருசா ஏதும் ரியாக்ட் பண்ற மாதிரியே தெரியலையேப்பா?" என முதல் சந்தேகத்தை போட்டார் டீ மாஸ்டர். " நானும் இதைதான் கேட்பீங்கனு நினைச்சேன் ணா, அதெப்படி கவனிக்காம இருப்பாங்க, எல்லாம் கவனிச்சிகிட்டு தான் இருக்காங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு யாரு ஆலோசனை கொடுக்கிறா, எப்படி சரியான அரசியல் வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை தயாரிக்கிறார் என்பது வரைக்கும் உளவுத்துறை மூலமாக டேட்டா பாஸ் ஆயிட்டு தான் இருக்கு. குறிப்பா சூரிய கட்சி வாரிசும் நடிகரோட மூவ்மென்டுகளை உன்னிப்பா கவனிச்சிகிட்டு தான் இருக்கிறாராம். இப்போதைக்கு பெருசா எந்த நெருக்கடியும் கொடுத்து அவருக்கு விளம்பரம் தேடிக் கொடுக்க வேண்டாம். களத்துக்கு வரட்டும், நம்மள அட்டாக் பண்ணுனா, அப்புறம் நம்மளடோ அரசியல் தனத்தையெல்லாம் அப்போ காண்பிச்சுக்கலாம். அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம். நம்மளால அவருக்கு விளம்பரம் கிடைச்சிடக்கூடாது. முடிஞ்சளவுக்கு கண்டுக்காம இருக்கலாம் அப்படிங்கிறது தான் சூரிய கட்சியோட இப்போதைய நிலைப்பாடாம். ஆளும் கட்சியா வேற இருக்கிறதால, சின்ன விஷயத்தைக் கூட பெருசாக்கி விளம்பரம் தேடிக்குங்கவாங்க, அதனால நாம தான் பொறுப்பா இருக்கணும்னு முடிவெடுத்து இருக்காங்களாம். ஐடி விங்குக்கு கூட, அவருக்கு ரியாக்ட் பண்ணாதீங்க அப்படிங்கிறது தான் உத்தரவாம்." என்றான் குசும்பன். 


மேலும் படிக்க | கிசுகிசு : செம அப்செட்டில் தூங்காநகரத்து மூன்றெழுத்து இன்ஷியல் மாண்புமிகு


"ஓ... அப்படியா மேட்டர், நடிகரோட பிளான் என்னவாம்?" என அடுத்த கேள்வியை மாஸ்டர் போட்டார். "அண்ணே! மாநாடு நடத்தினாலும் ஆளும் தரப்பையெல்லாம் பெருசா சீண்டக்கூடாதுங்கிற நிலைப்பாட்டுல தான் இருக்காறாம். கடைசி படம் முடியுற வரைக்கும் அமைதியா தான் இருக்கப்போகிறார். மாநாட்டுல கொள்கை, அவரோட கட்சி செயல்பாடு, கட்டமைப்பு, மக்கள்கிட்ட எப்படி ரீச்சாகணும் அப்படிங்கிறத மட்டும் தான் பேசப்போறாராம். கொள்கைய பொறுத்தவரைக்கும், பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்டவங்க நிலைப்பாடுகளை சொல்லிட்டு, அங்களோட உண்மையான நோக்கத்தை இங்க இருக்கிற அரசியல் கட்சிகள் சரியா பின்பற்றவில்லை, வாக்கு அரசியலுக்காக திசைமாறிட்டாங்க, சாதி ஒழிப்பையெல்லாம் முன்னிறுத்தாம, சாதிய வளர்க்கிற வேலைய தான் செஞ்சிருக்காங்க-னு சொல்லிட்டு எங்க கட்சி இந்த வழியில சரியாக பயணிக்கும்னு சொல்ல இருக்கிறாராம்." என குசும்பன் சொல்ல, "இது பொத்தாம் பொதுவா இருக்கிற மாதிரி இருக்கே, சரியா வருமா?" என மாஸ்டர் அடுத்த கேள்வியை போட்டார். "வந்ததுக்கு அப்புறம் தான நாமும் சொல்ல முடியும்" என பதில் கொடுதான் குசும்பன்.


"அது சரி, நடிகர் மேல குடில் கட்சி தலைவர் கோபமாக இருக்கிறாரே, என்ன சேதி?" என மாஸ்டர் கேட்க, "அண்ணே, குடில் கட்சி இயக்குநர் பல வழிகளில் நடிகருக்கு தூண்டில் போட்டாரு. ஆனால் அவரு பக்கம் இருந்து ஒரு சமிக்கையும் இதுவரைக்கும் வரல. இதனால் கடுப்பாயிட்டாரு இயக்குநர். இவரு மேல பல பிராதுகள் இருக்கிறதால, கொஞ்சம் தள்ளியே இருப்போம்னு நடிகர் முடிவெடுத்துட்டார். இதை மோப்பம் பிடிச்ச இயக்குநர், தம்பி தம்பினு கூப்பிட்டுகிட்டு இருந்துட்டு, இப்போ கடுப்புல சரமாரியா திட்ட ஆரம்பிச்சிட்டாரு" என்றான் குசும்பன். இந்த கதையை கேட்டு முடித்த டீ மாஸ்டர், "சரிப்பா நாளைக்கு பார்க்கலாம்னு" குசும்பன வழியனுப்பி வச்சிட்டாரு. 


மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ