கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!

Gossip, கிசுகிசு : பவுர்புல் கேபினட்டுகளின் தலையீட்டால் மாநாட்டுக்கு இடம் கிடைக்காமல் மாவட்டம் மாவட்டமாக அலைந்து கொண்டிருக்கிறார் உட்ச நடிகர். அவருக்கு எதிரான கள அரசியல் ஆட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டது ஆளும் தரப்பு.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 16, 2024, 08:04 AM IST
  • மாநாட்டுக்கும் இடம் கிடைக்காத விரக்தியில் நடிகர்
  • அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் கேபினட்டுகள்
  • வட மாவட்டம் பக்கம் இடம் பார்க்கும் உட்ச நடிகர்
கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..! title=

Gossip News Tamil : குளிருக்கு ஸ்வெட்டர் போட்டுக்கு கொண்டு வந்த குசும்பன், டீ மாஸ்டரிடம் ஒரு சுக்குப் பால் ஆர்டர் செய்துவிட்டு பேப்பரை எடுத்து புரட்டினான். "என்னப்பா கேபினட்டுகளில் சில சலசலப்பு தெரியுதே" என மாஸ்டர் கேட்க, "அதுவாண்ணே! முதன்மையானவர் அமெரிக்க டிரிப் உறுதியாயிட்ட நிலையில், சில பேரின் பதவி பறிப்பு கோட்டை வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கு. அதுமட்டும் இல்லாம பவர்புல் கேபினட்டுகள் தங்களுக்கு துறை மாற்றம் வேண்டும்னு கோரிக்கை வச்சிருக்காங்களாம். ஏற்கனவே கேபினட்டுகளின் ரிப்போர்ட் கார்டை கையில் வச்சிருக்கும் முதன்மையானவர், எல்லாத்தையும் சைலண்டாக கேட்டுக்கொண்டு, நல்லா வேலை செய்யுறவங்களோட கோரிக்கைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கலாம்னு முடிவு எடுத்திருக்கிறாராம். வேலை செய்யாதவங்க மேல நடவடிக்கை எடுக்கலைனாலும், அவங்க வச்ச டிமாண்ட் எதுக்கும் கிரீன் சிக்னல் கொடுக்கப்படாதாம்.

மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!

வாரிசுக்கு புரோமோஷன் வந்ததும் அவரே இனி கேபினட்டுகளின் சமாச்சாரத்தையும் கவனிக்கப்போராறாம். எல்லா துறைகளிலும் அவரோட கை நீளப்போகிறத நினைச்சு மூத்த தலைகள் கொஞ்சம் ஆதங்கப்பட்டுக்கிட்டாலும், சரி பாதுக்கலாம்ங்கிற முடிவுல இருக்கிறாங்கலாம். பவர்புல்லா இருக்கிறவங்க மட்டும் வாரிசு பக்கம் இருந்து எந்த பிரச்சனையும் வராதுங்கிற நம்பிக்கையில இருக்கிறாங்களாம். சிலர் வாரிசை இப்போவே வலையில் விழ வைக்க வெஞ்சாமரம் வீச ஆரம்பிச்சிட்டாங்களாம். எல்லோரும் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவங்க என்பதால, வாரிசு இவங்களோட இனிப்புக்கு மயங்குறாரா? இல்லையா?, தலைகளை எல்லாம் எப்படி ஹேண்டில் பண்ணப்போறாரு என்பதில் தான் அவரோட ஆளுமை நிரூபணமாகும்னு சிலர் கிசுகிசுக்க ஆரம்பிச்சிருக்காங்க." என சொல்லிக் கொண்டு டீயை குடித்து முடித்தான் குசும்பன்.

"அது சரி தம்பி... நடிகருக்கு மாநாட்டுக்கு இடம் கிடைச்சுதா இல்லையா?" என அடுத்த கேள்வியை போட்டார் டீ மாஸ்டர். "அண்ணே! வாரிசுக்கு எதிரா தான் அந்த உட்ச நடிகரோட அரசியல் இருக்கப்போவது. அதை தெரிஞ்சுக்கிட்டு தான் இப்போ வாரிசுக்கு புரமோஷன் கொடுக்குது ஆளும் தரப்பு. இனி அவர் தான் கட்சி, ஆட்சியில ஆதிக்கம் செலுத்தப்போறாருன்னு தெரிஞ்சுக்கிட்ட கேபினட்டுகள், உட்ச நடிகர் எங்க ஏரியாவுல மாநாடு நடத்தக்கூடாதுன்னு வெயிட்டைக் காட்டுறாங்களாம். முதல்ல மலைக்கோட்ட பக்கம் தான் மும்முரமா இடம் பாத்துட்டு இருந்தாரு நடிகர். ஆனால் அங்க இருக்கிற இரண்டு பவர்புல் கேபினட்டுகளும், தங்களின் பவரை காட்ட ஒருவர் கூட இடம் கொடுக்க முன் வரலையாம். சிலர் கேபினட்டுகள் தப்பா நினைச்சிட்டா சிக்கலா போயிரும்னே இடம் கொடுக்கலையாம். இடம் கொடுக்க முன்வந்த சிலருக்கும் செல்லமான முறையில் எச்சரிக்கையும் போச்சாம். அதனால் அங்க இடம் கிடைக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்ட நடிகர் தரப்பு வடமாட்டம் பக்கம் இடம் பாக்க ஆரம்பிச்சிருக்கு.

இப்போ அந்த ஏரியா பவர்புல் கேபினட் என்ன பண்ணப்போறாருன்னு தெரியல. வாரிசை அடுத்த முதல்வர்ன்னு முதன்முதலா மேடையிலேயே சொன்னவரு வடமாவட்ட கேபினட் தான். அதனால், அவரும் நடிகர் மாநாட்டுக்கு இடம் கொடுக்கிறங்களுக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருக்குன்னு ஒரு பேச்சு ஓடுது. மலைக்கோட்டை கேபினட்டுகள் இரண்டு பேரும் செஞ்ச மாதிரியே இவரும் செய்வாரான்னு இப்போதைக்கு தெரியலை." என சொல்லிவிட்டு, "அண்ணே அவசரமா ஒரு வேலைக்கு இருக்குன்னு" மாஸ்டர்க்கு டாடா பாய் சொல்லிவிட்டு கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | உதயநிதி துணை முதலமைச்சராவது கன்பார்ம் - அப்டேட் கொடுத்த இன்னொரு அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News