Gossip News Tamil : ’வாப்பா குசும்பா, தேர்தல் முடிஞ்சாலும் அரசியல் களம் இப்போவும் சூடா இருக்கிற நேரத்துல நீ அடிக்கடி காணாம போறீயே என்ன சேதி?’ என டீ மாஸ்டர் கேட்க, ‘ அண்ணே, எல்லா பக்கமும் நிறைய தகவல் வர்றதாலே, விஷயத்தை கேட்க போயிடுறேன், அதனால் தான் சரியா இங்க வர்ற முடியல’ என்றான் குசும்பன். ‘அதுசரி மேட்டர சொல்லுப்பா?’ என அவசரம் பொறுக்க முடியாமல் டீ மாஸ்டர் கேட்டார். ‘அதுக்குதான வந்திருக்கேன், முதல்ல பூ கட்சி மேட்டருல இருந்து ஆரம்பிக்கிறேன் என்று’ தொடங்கினான் குசும்பன். ‘அண்ணே, பூ கட்சியில் பெரிய முக்கியத்தும் கொடுக்கிறேனு, சொல்லி கூட்டிட்டு போன அக்கட்சியோட காக்கி மாஜி மேல சூரிய கட்சியோட முக்கிய புள்ளி மகன் இப்போது செம கடுப்புல இருக்கிறாரு. எக்காரணத்தைக் கொண்டும் அந்த காக்கி மாஜியை அம்பலபடுத்தாமவிடா மாட்டேன்னு கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில இறங்கியிருக்காப்ள. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி


இருக்காத பின்ன, ’நேரானவர்’ மேல இருந்த அதிருப்தியில சூரியக்கட்சியோட மேலிடத்தையும் பகைச்சிக்கிட்டு பூ கட்சிக்கு போனாரு. ஆனால் அங்க நடந்த விஷயங்கள பார்த்துட்டு, இதுசரிபட்டு வராதுன்னு திரும்ப வந்துட்டாரு. இப்போது மீண்டும் சூரிய கட்சியில உள்ள நுழையிறதுக்காக நேரம் பாத்துட்டு இருக்கும் அவரு, அதுக்கு முன்னால பூ கட்சியின் தலைமையில இருக்கிற முன்னாள் காக்கியோட ரகசியங்கள அம்பலப்படுத்த தொடங்கியிருக்கிறாரு. ஆசை காட்டி ஏமாத்துனது மட்டுமில்லாம, என்னைய வச்சு உன்னோட மைலேஜ் டெல்லியில ஏத்திக்கிட்ட இல்ல, இப்போது அந்த மைலேஜ் டோட்டல்லா காலி பண்றேனு, காக்கி மாஜிகூட இருந்தப்போ நேர்ல பார்த்த, ரகசியமா சேகரிச்சு வச்ச விஷயங்களை எல்லாம் வெளியிட்டுட்டு இருக்காரு அவரு. 


இதை தெரிஞ்சுகிட்ட காக்கி மாஜி, திருச்சிக்கார தம்பிய எப்படியாச்சும் ஆப் பண்ணணும்னு நினைக்கிறாராம். அதுக்கு எந்தரூட் போடலாம்ன்னு யோசிக்கிறாராம். திருச்சிக்கார தம்பிக்கு நெருக்கமான அவரோட சமூக ஆட்கள வச்சே அமைதியாக்க முயல்கிறாராம். ஆனால், இந்த பசப்புக்கெல்லாம் நான் அடங்கமாட்டேன், நீ வேற ஆள பாருப்பா தம்பிங்கிற கணக்கா திருச்சிக்கார தம்பி இருக்காராம். இன்னும் கொஞ்ச நாட்கள்ல காக்கி மாஜியோட முழு சொத்து பட்டியலை இறக்க திட்டமிட்டுட்டு இருக்கிறாராம். அதுக்கு முன்னால ஏதாச்சும் பண்ணணும்ங்கிறது தான் காக்கி மாஜியோ பிளானாம். இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா?,  காக்கி மாஜி மேல அதிருப்தியில் இருக்கிற பூ கட்சி மூத்த தலைகள் எல்லாம் அவங்க கிட்ட இருக்கிற தகவல்களையும், அந்த திருச்சிக்கார தம்பிக்கிட்ட கொடுக்க தொடங்கியிருக்கிறார்களாம். சீக்கிரம் அவர அம்பலப்படுத்துப்பா என உசுப்பேத்துறாங்களாம்’ என்றான் குசும்பன்.


மேலும் படிக்க | கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்


’அதுசரி, திருச்சிக்கார தம்பிய எப்படிப்பா, மீண்டும் சூரியக்கட்சியில சேர்த்துக்குவாங்க?’ என கேட்க, ‘அண்ணே, கொஞ்ச நாட்களுக்கு தன்னோட பர்சனல் இமேஜ் சரியாகுற வரைக்கும் அமைதியா இருக்கலாம்னு நினைக்கிறாராம். அப்புறம், மேலிடத்தோட நன்மதிப்பு பெற்று, அப்படியே ஐக்கியமாகலாம்ங்கிறது தான் திட்டமாம். குறிப்பா, உதயமானவரோட அணியில சேர்ந்துக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாராம். கோட்டை தேர்தல் வர்றத்துக்கு முன்னால, இவரு மீண்டும் சூரிய கட்சியில ஐக்கியமாக வாய்ப்பு இருக்காம்.


அதுக்குள்ள தன்னோட அப்பாகூட சமாதானம் ஆகி, ரூட்டை கிளியர் பண்ணிக்கலாம்னு நினைக்குறாராம். இவரவிட சர்ச்சைகளில் சிக்குனவங்க, சூரியக்கட்சியோட தலைமைய கடுமையா விமர்சித்தவங்களே கூட, இப்போ கட்சியில இருக்கிறதால, இவரு சேர்றதும் ஒன்னும் பிரச்சனை இல்லைனு நினைச்சிட்டு இருக்கிறாராம். ஆனால், உதயமானவரும், மேலிடமும் அந்த சிந்தனைக்கு எப்போ வருவாங்கனு தான் தெரியல. ஒருவேளை இவரோட அப்பா மேல இருக்கிற மரியாதை காரணமா, அது கூடிய சீக்கிரமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைங்கிறது தான், திருச்சிக்காரரோட அப்டேட்’ என குசும்பன் முடிக்க, டீ மாஸ்டர் இன்னைக்கு இது போதும்பா, நான் சீக்கிரம் போறேனு கிளம்பிட்டாரு. அதனால் இலைக்கட்சி, இயக்குநர் கட்சி, காக்கி வட்டார தகவல்கள நாளைக்கு சொல்லியே ஆகனும் என நினைச்சிட்டு வீட்டுக்கு கிளம்பினான் குசும்பன்.


மேலும் படிக்க | கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ