கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி

Gossip : முன்னாள் காக்கியை நம்பிச் சென்ற ஸ்டார் நடிகரும், கதர் பெண்மணியும் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பூ கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2024, 03:16 PM IST
  • பூ கட்சியில் அதிருப்தியில் இரண்டு பேர்
  • முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்துட்டாங்களாம்
  • தீவிர ஆலோசனையில் இருக்கும் கதர்கட்சி பெண்
கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி title=

Tamilnadu Political Gossip : வழக்கம்போல டீ மாஸ்டர், டீ ஆத்திக் கொண்டிருக்க காலையில் விடிந்தும் விடியாதுமாக கடைக்கு வந்தான் குசும்பன். ’என்னைய்யா, நேற்று அவசர அவசரமா எங்கையோ போனையே என்ன ஆச்சு?’ என மாஸ்டர் கேட்க, ‘அதாண்ணே... முதன்மையானவருக்கும், கவிஞருக்கும் என்ன பிரச்சனைன்னு விசாரிக்க போனேனா, அப்போது இடையில பூ கட்சி மேட்டர் கிடைச்சது. அதை கேட்டுட்டு அப்படியே வந்துட்டேன்’ என்றான் குசும்பன். ‘என்ன மேட்டரு, ஏதாச்சும் புதுதகவலா?’ என மாஸ்டர் கேட்க, ‘ஆமான்னே, முன்னாள் காக்கிய நம்பி போன கதர் கட்சி பெண்ணும், அந்த ஸ்டார் நடிகரும் வருத்தத்தில் இருக்காங்களாம்.’ என ஆரம்பிச்சான் குசும்பன். ‘அப்படியா மேட்டரு, கொஞ்சம் விலாவரியா சொல்லுப்பா’ என மாஸ்டர் கேட்க, கேப்புல ஒரு டீ குடுண்ணே என கேட்டு வாங்கிக்கொண்டு கதையை ஆரம்பித்தான் குசும்பன்.

மேலும் படிக்க | கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா?

‘அண்ணே, செங்கோட்டை தேர்தலுக்கு முன்னால கதர் கட்சியை சேர்ந்த அந்த மூத்த பெண்மணி, அந்த கட்சிமேல இருந்த அதிருப்தியில, பூ கட்சிக்கு ஜம்ப் அடிச்சாங்க இல்ல, அப்போது அவங்க பல வாக்குறுதிய பூ கட்சி மேலிடத்துகிட்ட வச்சிருந்தாங்களாம். அது ஒன்னுகூட பெரிய தலைகள் கண்டுக்கவே இல்லையாம். அதனால செம அப்செட்டுல இருக்கிறாங்களாம். இவங்க வேற, முன்னால் காக்கிகூட ஆரம்பத்திலேயே பகைச்சுகிட்டதால இங்க அவங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கிறது இல்லையாம். தேவையில்லாம ரெண்டு மூனு வருஷம் இருந்த பதவிய வேற விட்டுட்டு, இவங்கள நம்பி வந்ததற்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என தன்னையே நொந்துக்கவும் செய்யறாங்களாம். 

முன்னாள் காக்கி முன்னிலையில் கட்சியில் இணைஞ்சிருதா கூட ஏதாவது முக்கியவத்தும் இங்க கிடைச்சிருக்கும். ஆனால், இவங்க வேற, கட்சியில் இணையும்போதே ரெண்டு முனு முறை கோட்டைக்கு ஜெயிச்சு போய் இருக்கிற நானு, முன்னால் காக்கி முன்னிலையில் இணையறதா? என வீம்புபுடிச்சு பெரிய தலைகள் முன்னால தான் இணைவேன் என அப்போவே ஒத்தகால்ல நின்னாங்க. அப்போதே பூ கட்சி மேலிடம் இவங்கள பத்தி விசாரிச்சிட்டு பெருசா ஆர்வம் காட்டல. ஆனால் அந்தம்மா, கதர் கட்சிமேல இருந்த கோவத்துல, என்னோட வெயிட்ட காட்டுறேன்னு, இங்க வந்தாங்க. இப்போது இங்க ஒரு வாய்ப்பும் இல்லையா? அதனால் கதர் கட்சியே பரவலாம் என பேசிகிட்டு இருக்காங்களாம். அங்கேயே திரும்ப போலாம்னு நினைச்சாலும், இனி சேர்த்துக்கவும் மாட்டாங்க, முன்ன இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இருக்காதுன்னு வெசனத்துல இருக்காங்களாம்’ என்றான் குசும்பன். ’ஆமாப்பா, அந்தம்மா இந்த விஷயத்தில் கொஞ்ச அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டாங்க, அதுசரி ஸ்டார் நடிகர் என்ன மேட்டரு?’ என டீ மாஸ்டர் கேட்டார்.

மேலும் படிக்க | கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்

‘அண்ணே அவரும், முன்னாள் காக்கிய நம்பி தான் கட்சியை இணைச்சாரு. வழக்கு விஷயம் வேற கொஞ்சம் சீரியஸா இருந்ததால், வம்பு ஏதும் வேண்டாம்னு தான் சேர்ந்தாரு. இருந்தாலும் ஏதாவது நியமன பதவி கிடைக்கும்னு எதிர்பார்த்தாரு. ஆனால், ஜெயக்குறதுக்கு வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சும் ஒரு சீட்ட கொடுத்து முன்னாள் காக்கி அவங்களோட மவுசு இதுதான் பார்த்துக்கோங்கனு ஓரங்கட்டிட்டார். இப்போது அமைதியா இருந்தாலும், மாநில அளவுல தனக்கு பொறுப்பு பெரிய தலைகள் கொடுக்கும்னு எதிர்பார்க்குறாரு. ஸ்டார் நடிகருக்கு ’மாநில தலைமை’ பொறுப்பு தான் ஆசையாம். நடிகர் மற்றும் சாதி சப்போர்ட் இருக்கிறதால, அந்த பதவி கிடைச்சா ஸ்கோர் பண்ணிருலாம்னு நினைக்கிறாராம். ஆனால், இதை தெரிஞ்சுகிட்ட முன்னாள் காக்கி, அப்படியே அவங்கள ஓரங்கட்ட ஆரம்பிச்சுட்டாராம். இதனால் அவரும் அப்செட்ல தான் இருக்காராம்." என கூறிவிட்டு, மாஸ்டருக்கு பாய் சொல்லிவிட்டு கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News