Gossip News Tamil : " என்னையா குசும்பா ரொம்ப நாளா ஆளையே காணோம், எங்க போன?" என டீக்கடைக்கு வந்த குசும்பனிடம் மாஸ்டர் கேட்க, "அண்ணே! தூங்கா நகரத்து வரைக்கும் போய்ட்டு முக்கியமான தகவலை விசாரிச்சுட்டு வந்தேன்" என்றான். "அப்படியா! என்ன மேட்டர்?" என மாஸ்டர் கேட்க, "சூடா ஒரு டீ போடுங்க, சொல்றேன்" என தூங்கா நகரத்து மேட்டரை ஆரம்பித்தான் குசும்பன். "அண்ணே! தூங்கா நகரத்துல இருக்கிற மூன்றெழுத்து இன்ஷியல் மாண்புமிகு செம அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பெரிசா முக்கியத்துவம் கொடுக்காததால அதிருப்தியில இருக்கிற அவரு, அங்கேயே இருக்கும் இன்னொரு மாண்புமிகுவும், மாவட்டமும் சேர்ந்து செய்யுற உள்ளடி வேலைகளில் ரொம்ப அப்செட்டில் இருக்கிறார். போதாக்குறைக்கு தூங்கா நகரத்துக்கு போய்டு வந்த வாரிசும் இவர ஒதுக்குற மாதிரியே நடந்துக்கிட்டார். இவரு முன்னாடியே அந்த மாண்புமிகுவ உட்சபட்சமா புகழ்ந்த வாரிசு, இனி நீங்க தான் தூங்கா நகரத்து அடையாளம்னு சொல்லிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவைக்கு வந்த ஆகாஷ் அம்பானி... அதுவும் 40 கார்கள், 4 விமானங்களின் துணையோடு - என்ன மேட்டர்?


அதை மேடையிலேயே இருந்து கேட்டுட்டு இருந்த மூன்றெழுத்து இன்ஷியல் மாண்புமிகு, ரொம்ப அப்செட்டாயிட்டாராம். ஆட்சியிலையும் நமக்கு முக்கியத்துவம் இல்லாம பண்ணிட்டாங்க, கட்சிலயும் பெருசா யாரும் மதிக்கிறது இல்ல, வேணும்னே நம்மள எல்லோரும் சேர்ந்து ஓரங்கட்டுறாங்கனு புரிஞ்சுகிட்ட அவரு, பேசாம இனி அரசியலுக்கு முழுக்கு போட்டுறலாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாராம். இவ்ளோ படிச்சிருந்தும், அதை செய்ய வாய்ப்பு கொடுக்காம நம்மல அடிமை மாதிரி நடத்துறாங்களேனு வருத்தப்படுறாராம். பிறர் மாதிரி ஜால்ரா அடிச்சு பழக்கமில்லாத அந்த மாண்புமிகு எவ்வளவு நாள் தான் அமைதியா இருக்கிறதுங்கிற நினைப்புக்கு வந்துட்டாராம். வாரிசு தான் இனிமேல் கட்சி, ஆட்சி எல்லாம்ங்கிற நிலைமை உருவாகிட்டதால, இவங்க கூட இனி நமக்கு செட்டாகாதுங்கிற முடிவிலையும் இருக்கிறாராம். 


தூங்கா நகரத்துக்கு வர்ற வாரிசு, என் முன்னாலேயே நீங்க தான் இனி இங்க எல்லாமேனு சொல்ற அளவுக்கு நான் முக்கியத்துவம் இல்லாம போயிட்டேனா? என்பது தான் அவரோட ஆதங்கமாம். போதாக்குறைக்கு ஒபாமா ஊருக்கு போய் இருக்கிற முதன்மையானவரும் இவர பேச்சுக்கூட கூட வாங்கனு கூப்பிடலையாம். ஏன்னா, அங்கேயே 20 வருஷத்துக்கும் மேல இருந்து, பல தொழிலதிபர்கள்கூட பழக்கம் வச்சிருக்கிற இவரை முதன்மையானவர் கூப்பிடுவாருன்னு எதிர்பார்த்தாராம். ஆனால், இவர கூப்பிடாததால அதுலையும் கொஞ்சம் அப்செட்டாம். படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி கவுரவமா ஏதாவது செஞ்சிட்டு போலாம்னுங்கிற நினைப்புல இருக்கிறாராம். கோட்டை தேர்தல் வருவதற்கு முன்னால இவரோட அதிரடி முடிவுகளை எதிர்பார்க்கலாம்னு தூங்காநகர தகவல்கள் கூறுது" என படப்படன்னு கதையை சொல்லி முடித்தான் குசும்பன். 


மேலும் படிக்க | திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி... அது எப்படி...?! - சஸ்பென்ஸை உடைத்த மா.சுப்பிரமணியன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ