கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?
Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.
Gossip News Tamil : டீக்கடைக்கு வந்த குசும்பன், வடை போட்டுக் கொண்டிருந்த மாஸ்டரைப் பார்த்து "அண்ணே! வடையை இங்க ஒன்னு கொடுங்க... உங்களுக்கு சூடாக ஒரு தகவலை சொல்றேன்" என்றதும், "கட்சி நடத்தும் பழைய இயக்குநர் மற்றும் புதுசா வர இருக்கும் உட்ச நடிகர் கூடாரத்தை பற்றிய செய்திய சொல்லப்பா.." என்றார் மாஸ்டர். "நானும் அதைத்தாண்ணே சொல்ல வந்தேன். அண்ணே! 15 வருஷமா கட்சி நடத்தும் பழைய இயக்குநரான குடில் கட்சி தலைவர் ஊர் ஊரா போய் நிர்வாகிகள சந்திச்சிட்டு இருக்காரு. அப்போ, வரப்போற கோட்டை தேர்தல் கட்சி செலவுக்கு காசு பத்தல, திரள் நிதிய வேகமாக திரட்டுங்கன்னு உத்தரவு போட்டு இருக்காரு.
இதைக் கேட்ட அங்கிருந்த தம்பிகள் நம்ம பாக்கெட்டுல இருந்து உருவுறதுக்கு தான் இந்த டிரிப்ப போட்டிருக்காருபோல என முனுமுனுத்திருக்கிறார்கள். தம்பிங்க பேசுறத கேட்டுக்கிட்ட குடில் தலைவர், காதுல விழாத மாதிரி அடுத்த ஊருக்கு கிளம்பி போய்ட்டு இருக்கிறார். செல்வாக்கா இருக்கிற ஆட்களை மட்டும் பார்த்து, இந்த இடத்தில நீ நில்லுப்பா என தோள் தட்டிக் கொடுத்து 60 இடத்துக்கு இப்போவே ஆள தயார் பண்ணி வச்சிட்டார்." என்றான் குசும்பன். "அதுசரி, புதுசா வரப்போற அந்த உட்ச நடிகர புகழ்ந்துட்டு இருந்த அவரு, திடீர்னு ஏன் தனியா நிக்குறேன்னு சொல்லியிருக்கிறாரு?" என டீ மாஸ்டர் ஒரு சந்தேக கேள்வியை போட்டார். "அண்ணே! எல்லா பேட்டியிலையும் தம்பி... தம்பின்னு இவரு சொன்னாலும், உட்ச நடிகர் பக்கம் இருந்து இவருக்கு தோதா ஒரு சமிக்கையும் வரலையாம்.
மேலும் படிக்க | "லஞ்ச பேய்"...செப்டிக் டேங்கில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்
கட்சி தொடங்குறப்போ தனக்கு அழைப்பு இருக்கும்னு எதிர்பார்த்தாராம். அதுவும் இல்லாததால, இனி அவர நாம புரோமோட் பண்ணக்கூடாதுன்னு பழைய இயக்குநரான குடில் கட்சி தலைவர் முடிவெடுத்துட்டாராம்." "குடில் கட்சி தலைவர பத்தி உட்ச நடிகர் என்ன நினைக்கிறாராம்?" என டீ மாஸ்டர் அடுத்த கேள்வியை போட்டார். " அண்ணே! குடில் கட்சி நடவடிக்கை மேல உட்ச நடிகருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லையாம். ஏன்னா? பழைய இயக்குநர் முதல் நிர்வாகிகள் வரை எல்லோரும் பெண்கள் சமாச்சாரத்துல தொடர்ச்சியா சிக்கிட்டு வர்றதால அவங்க கூட சேந்து நாம பெயரை கெடுத்துக்கக்கூடாதுங்கிற முடிவில இருக்கிறாராம். சமீபத்துல கூட பசுமை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி கல்வியாளராக இருக்கிற குடில் கட்சியின் முக்கிய புள்ளி மீது பாலியல் குற்றச்சாட்டை வச்சாங்க. இதெல்லாம் உட்ச நடிகர் கவனிச்சிட்டு தான் இருக்கிறாராம்.
குடில் கட்சி செயல்பாடு எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்துட்ட அவரு, அவங்க கூட எக்காரணத்தைக் கொண்டும் இணக்கம் காட்டிடக்கூடாதுங்க முடிவில இருக்கிறாராம். ஏன்னா அந்தளவுக்கு குடில் கட்சி இயக்குநர் கெட்டபெயரை சம்பாதிச்சு வச்சிருக்கிறாரு. நடிகரை பொறுத்தவரை தொடக்கப்புள்ளியே தனித்து தான் அப்படிங்கிறதல முடிவா இருக்கிறாரு. கை, பானை, கதிர் அரிவாள் உள்ளிட்டவங்க தன்கூட வர விரும்புனா, அவங்க கூட போகவும் தயாரா இருக்கிறாரு. ஆனால் குடில் கட்சி பேச்சை கட்சி ஆபீஸ்ல கூட பேசக்கூடாதுங்கிறதுல உறுதியாக இருக்கிறாராம் உட்ச நடிகர்." என்று கதையை முடித்துவிட்டு கிளம்பினான் குசும்பன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ