கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம்

Gossip, கிசுகிசு : வாரிசுவின் பட்டாபிஷேகத்தை இரண்டு காரணங்களுக்காக தள்ளிப்போட்டிருக்கிறாராம் முதன்மையானவர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 6, 2024, 02:33 PM IST
  • வாரிசுக்கு தள்ளிப்போன பட்டாபிஷேகம்
  • முதன்மையானவர் கையில் இருக்கும் ரிப்போர்ட்
  • சில சீனியர்கள் அப்செட்டில் இருப்பதாக தகவல்
கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம் title=

Tamil Political Gossip : மழையில் நனைந்தபடியே ஓடோடி டீக்கடைக்கு போன குசும்பன், அங்கு சூடாக இருந்த ஒரு வடையை எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, ’என்னப்பா ஒரே ஜோரா வந்திருக்க மேட்டர் என்ன?" என கதையை ஆர்வத்தோடு கேட்டார் டீக்கடை மாஸ்டர். " அண்ணே, நீங்க எண்ணெய்யில போட்டு எடுக்கிற போண்டா மாதிரியே சூடான விஷயத்தோட தான் வந்திருக்கேன், அதை கேட்பதற்கு முன்னால இங்க ஒரு போண்டாவ போடுங்க" என கேட்டு வாங்கிட்டு பட்டாபிஷேகம் விஷயத்தோடு அரம்பித்தான் குசும்பன். "அண்ணே நாம போனவாரம் பேசுன மாதிரியே தன்னோட வாரிசுக்கான பட்டாபிஷேகத்தை தள்ளிப்போட்டிருக்கிறார் முதன்மையானவர். அதுக்கு பின்னால நிறைய காரணங்களும் இருக்காம்." என குசும்பன் சொன்னவுடன் குறுக்கிட்ட மாஸ்டர் " தேதி எல்லாம் குறிச்சதா தகவல் வந்துச்சே, அதுக்குள்ள என்ன ஆச்சு?" என்ற இடைக்கேள்வி ஒன்றை கேட்டார் டீ மாஸ்டர்.

மேலும் படிக்க | கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலை

"அண்ணே, நம்பர் 2வுக்கு மகனை புரோமோஷன் பண்ணுவதில் முதன்மையானவருக்கும் விருப்பம் தானாம். ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி சீனியர்கள் சிலருக்கு அதில் விருப்பம் இல்லையாம். இவ்வளவு சீக்கிரம் வாரிசுக்கு நம்பர் 2 கொடுத்தால், இவ்வளவு நாள் கட்சிக்காக உழைத்த எங்களுக்கு என்ன மரியாதை? என சீனியர்கள் சிலர் முனுமுனுத்த விஷயம் முதன்மையானர் காதுக்கும் எட்டியிருக்கு. இன்னும் சில மூத்த தலைவர்கள் வாரிசுக்கு நம்பர் 2 கொடுக்கலாம்னு முதன்மையானவர் குளிர மாதிரி பேசுனதும் நடந்துச்சு. 

இருந்தாலும், இப்போது வேண்டாம்னு முதன்மையானவர் எடுத்த முடிவுக்கு பின்னால உட்கட்சி விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எல்லாம் இருக்காம். ஒழுங்கா கட்சி வேலை பார்க்காம இருக்கிற சில சீனியர்களையும், கேபினட்டில் வேலை செய்யாம இருக்கிற மூத்த தலைகளையும் ஓரம்கட்டும் முடிவில் முதன்மையானவர் இருக்கிறாரு. கூடவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செஞ்சிட்டு வர்ற இந்த நேரத்துல தன்னோட மகனுக்கு புரோமோஷன் கொடுத்தா கட்சிக்குள்ளையும் வெளியேயும் பிரச்சனைகள் இன்னும் பெருசாக வாய்ப்பு இருக்குன்னு, அவருக்கு ஆலோசனையும் கொடுக்கப்பட்டிருக்கு. 

அதனால, புரோமோஷன் விவகாரத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போட்டு இருக்கிறாரு முதன்மையானவர். அதேநேரத்துல, நம்பர் 2வுக்கான எல்லா பவரும் இருக்கும்ங்கிறதால, நிர்வாகத்துல இறங்கி வேலை பாருன்னும் வாரிசுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம் முதன்மையானவர்." என்றான் குசும்பன். "அப்போ, கேபினட் மாற்றம் இருக்கா இல்லையா?" என டீ மாஸ்டர் கேட்க, "அண்ணே, அது நிச்சயமாக இருக்கு. ஏன்னா முக்கிய துறைகளுக்கான செயலாளர்கள் மாற்றம் இன்னும் நடக்கல. கூடிய சீக்கிரம் கேபினட் மாற்றம் இருக்கிறதால, அந்த சமயத்தில மாத்திக்கலாம்னு தலைமை அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டிருக்காம். வளர்பிறை முடியறதுக்குள்ள மாற்றம் இருக்கும்னு தான் தகவல் வந்துட்டு இருக்கு" என சொல்லி முடித்த குசும்பன், மழை நின்னதை காரணமாக சொல்லிவிட்டு டீக்கடையில் இருந்து கிளம்பினான். 

மேலும் படிக்க | கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News