தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை: தீபாவளி பண்டிகையின் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் நவம்பர் 5 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 20 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிப்பு.
நவம்பர் 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதால், சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் பண்டிகையை கொண்டாட ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 5) விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
அவர்களின் கோரிக்கை அடுத்து, அதை கவனமாக பரிசீலித்த அரசு, தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களை கணக்கில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை நவம்பர் 4, 5, 6, 7 என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பது தற்போது உறுதியாகி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR