சென்னை: கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என இன்று (புதன்கிழமை) தமிழக அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் தமிழகம் தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ( Rajeev Ranjan) தெரிவித்துள்ளளர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 23 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தரப்பில் "டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்" (Test-Track-Treat) நெறிமுறையை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை தவிர, அனைத்து சர்வதேச விமான பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


புதிதாக கண்டறியப்படும் கொரோனா தொற்று (Coronavirus) நோயாளிகளை விரைவாக தனிமைப்படுத்தப்படுவார்கள் மற்றும் சரியான நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. 


ALSO READ | COVID-19 பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவின் பல நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்


கொரோனா அதிகமாக பரவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், அங்கு மேலும் COVID-19 பரவலைத் தடுப்பதற்கும், பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் (Containment Zones) கீழே உள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படும்:


அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே அனுமதி.
கடுமையான சுற்றளவு கட்டுப்பாடு.
வீடு வீடாக தீவிர கண்காணிப்பு.
இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளுக்கான (SARI) கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய உள்ளூர் மாவட்டம் அதிகாரிகள், காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பொறுப்பாகும். 
முகமூடி அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது மற்றும் சமூக தூரத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றை மாவட்ட நிர்வாகிகள் கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும். 


ALSO READ | COVID-19: இனி MASK வேண்டாம் என தெரிவித்த முதல் மாநிலம் இதுதான்!


கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கு இன்று முழுவதுமாக ஒழிந்தபாடில்லை. கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா அலை வேகமாக பரவி வருவதால், மக்களிடையே ஒரு அச்சம் நிலவிவருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அதிகமாக கொரோனா தொற்று பரவி உள்ளது என புள்ளி விவரம் காட்டுகிறது.


எனவே கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க தளர்வுகளுடன் ஏப்ரல் 30 வரை தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.


 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR