வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி இந்த முறைகேடு குறித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.  அதில் "தமிழக சட்டசபையில் 06/09/2021 தினத்தன்று முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு விவகாரத்தின் போது ஒரு அறிவிப்பை அமைச்சர் அறிவித்திருந்தார்.  கடந்த ஆண்டுகளில் பதிவுத்துறையில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, அந்த குழு அதில் நடந்த குற்றங்களை கண்டறிந்து, போலியாக பத்திர பதிவு செய்யப்பட்ட இனங்கள் மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய இனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தமிழக அரசின் மாநிலப் பாடலாக ’தமிழ்த்தாய் வாழ்த்து’ அறிவிப்பு


இதில் தவறு செய்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி சட்டபூர்வமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.  அதன்படி சிறப்பு புலனாய்வுக்குழுவை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்து, முதல் அடுக்கில் தலைவர் பொறுப்பில் ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், குழுவின் முதல் உறுப்பினராக சென்னை ஹைகோர்ட்டின் மூத்த வக்கீல் ஒருவரும், 2-வது உறுப்பினராக  பதிவுத்துறையின் 4 கூடுதல் பதிவுத்துறை தலைவர்களில் ஒருவரும் அரசால் நியமிக்கப்படுவார்கள்.  சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அடுக்கு நிர்வாக அலகாக இருக்கும்.  அதன்படி இக்குழுவின் செயல்பாடுகளில் தடை ஏற்படாமலும், நிதி சார்ந்த நடவடிக்கை, குழு பணிகளையும், உறுப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் நிர்வாக அலகு செயல்படும்.  இதன் தலைவராக ஒருங்கிணைப்பாளராக செயல்படும் கூடுதல் பதிவுத்துறையின் தலைவர் இருப்பார்.  இக்குழுவிற்கென்று தனி அலுவலகம் அமைக்கப்படும்.



அரசால் அமைக்கப்பட்ட இந்த குழுக்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து ஆராய வேண்டும்.அதாவது ஆள் மாறாட்டம், நிலா மோசடி, போலி ஆவணபதிவு போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.  வெளிநாடு, பிறமாநிலங்கள், இறந்தவர்கள் சொத்துக்களை போலியாக ஆவணப்பதிவு செய்த இனங்கள், காலாவதியான ரத்து செய்யப்பட்ட நிலங்களை அபகரிப்பு செய்த இனங்கள் போன்றவை குறித்து  இக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.


அரசு நிலங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள், நீர் நிலைகள், புறம்போக்குகள், சுவாதீன இடங்கள் போன்றவற்றின் போலியான ஆவணப்பதிவில் சார்பதிவாளர்களின் தலையீடு இருந்தால் அவர்கள் மீது இக்குழு நடவடிக்கை எடுக்கும்.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மனுக்களை பெற்று அதன் மூலம் இக்குழு ஆய்வு மேற்கொள்ளும், அதனையடுத்து இந்த புலனாய்வு குழு 3 ஆண்டுகள் செயல்படும்" என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ | குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR