ஓசூர் அருகே அரசு பள்ளியில் படித்து வரும் மாணவன் குண்டூசியை விழுங்கிய நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓசூர் அருகேயுள்ள மோரணபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் - தனலட்சுமி தம்பதியினரின் மகன் எல்லேஷ் (12) இவர் மோரனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளியில் வழக்கம்போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது குண்டூசி ஒன்றை வாயில் போட்டு கடித்து கொண்டிருந்த மாணவன் எல்லேஷ் எதிர்பாரதவிதமாக குண்டூசியை விழுங்கியுள்ளான்.


மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த காய்கறிகள் பக்கம் போகாதீங்க 


இதனால் அச்சமடைந்த மாணவன் எல்லேஷ் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பதறிப்போன பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவனை ஓசூர் அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், மாணவனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


குண்டூசி வயிற்றின் உட்புறத்தில் இருக்கும் காட்சியை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். வயிற்றில் இருந்து குண்டூசியை வெளியே எடுத்து மாணவனை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | Weight Loss: இந்த பழங்கள சாப்பிட்டு பாருங்க, சட்டுனு உடல் எடை குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ