`உடன்பாடு இல்லை...` உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
TN Assembly Governor Speech Controversy: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.
TN Assembly Governor Speech Controversy: 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். மேலும், தேசிய கீதம் இசைக்காததற்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்து, தனது உரையை வாசிக்காமல் அமர்ந்தார். சட்டப்பேரவை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.ட
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, "தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கவும், உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என்ற எனது பலமுறை கோரிக்கைகளும் அறிவுரைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | டாப் 10 முதல்வர்கள்... நம்பர் 1 இவரா...? ஸ்டாலினுக்கு என்ன இடம் தெரியுமா?
இந்த உரையில் பல பத்திகள் இடம்பெற்றுள்ளன. அதன்மீது நான் தார்மீக அடிப்படையிலும், தகவல் ரீதியிலும் உடன்படவில்லை. அரசு தயாரித்து இருக்கக்கூடிய உரையில் பல்வேறு கருத்துக்கள் தனக்கு ஒத்துப் போகாமல் இருப்பதால் அதை வாசித்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும்.
எனவே அவைக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் எனது உரையை முடிக்கிறேன். இந்த அவை தமிழக மக்களின் நலனுக்கான பயனுள்ள விவாதம் நடைபெறும் இடமாக அமைய வாழ்த்துகள். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்" என்றார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் அரசின் உரையை ஆளுநர் புறக்கணிப்பது இது முதல் முறை
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் ரவி, அந்த உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடத்தில் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாகத்தை வாசித்து வருகிறார். ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார்.
இதேபோன்று, கடந்தாண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் ஆளுநர் வாசித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | திமுக அரசு எதையும் திட்டமிட்டு செய்யதில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ