CHENNAI: மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) ஒப்புதல் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி உட்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே 1 மாதத்திற்கு மேல் ஆகியும், இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா நீர்த்துப் போக நேரிடும் என அச்சம்  தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு 2020 (NEET Exam Result 2020) முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடப்பாண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்குமா? என மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். 


உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு முதலே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீட்டை (Horizontal Quota Bill) அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு குறித்து உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளனர். 


ALSO READ |  7.5% உள்ஒதுக்கீடு மசோதா குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்: MKS


இந்தநிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார் (Minister D Jayakumar) பேசினார். இந்த சந்திப்பில், "7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும். அதன் பிறகு தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியும்" என எடுத்து கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.


மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், "7.5% உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை மற்றும் கட்டாயம் கூட, எனவே விரைவில் ஒப்புதல் அளிப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR