திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு திருவாரூர் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர் பேசியதாவது, திருவாரூருக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பொதுவாகவே இசைக்கும் சிகிச்சைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆகவே இதனை ஒரு ஆராய்ச்சியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும் என தெரிவித்தார்.  தொழிலாளர் வேலை நேரம் குறித்த கேள்விக்கு எல்லாவற்றிற்கும் அரசியல் அழுத்தம் இருக்கக் கூடாது, இதனை தொழிலாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - செந்தில்பாலாஜி!


வேலை செய்பவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் ஆராய்ச்சியின் படி அதிகமான நேரம் வேலை செய்துவிட்டு அதிகமான நேரம் ஓய்வு எடுத்தால் மீண்டும் பணிக்கு செல்லும் பொழுது அதிகமான சக்தி கிடைக்கும். இது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது, ஏதாவது ஒரு விதத்தில் ஒரு விஷயத்தில் மேன்மை இருந்தால் மாற்றம் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாற்றமே கூடாது என்பது தவறான ஒன்றாகும். இதன் உண்மை தன்மையை அரசு தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ளது, அவர்கள் நல்ல முறையில் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன், இதை அரசியல்வாதிகள் முடிவு செய்வதை விட தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும். 


மேலும் சில தொழிற்சங்கங்கள் கூட அரசியல் ரீதியாக அதை எதிர்க்கிறார்கள். தமிழக அரசு எடுத்த முடிவு குறித்து நான் பதில் சொல்ல முடியாது, நான் ஒரு ஆளுநர் இருந்தாலும் ஒரு மருத்துவராக இந்த திட்டம் தொழிலாளர்களுக்கு நலம் தர கூடிய ஒரு திட்டம் என தெரிவித்தார்.  மேலும் விளையாட்டு மைதானங்களில் மது விற்பனை குறித்து கேள்விக்கு, பொது இடங்களில் பெண்கள் குழந்தைகள் கூடும் இடங்களில் மதுவை தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. ஆனால் அமைச்சர் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போன்ற தொடர்கள் முதலானவற்றில் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார், இது குறித்து சரியாக தெரியவில்லை. 


ஆளுநர் முதல்வர் உறவு குறித்து கேள்விக்கு முதல்வர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதம் பொருத்துதான் அது அமைகிறது, தெலுங்கானா முதல்வர் எந்தவித புரோட்டாகாலையும் சரிவர பயன்படுத்துவதில்லை. ஆளுநரை மதிப்பதில்லை என்னை பொறுத்தவரையில் எல்லாம் அரசியல் ஆக்கப்படுவது போல ஆளுநரும் அரசியல் ஆக்கப்படுகிறார்கள்.  புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சொல்லி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது  குறித்த கேள்விக்கு அவர் முதல்வராக இருந்த பொழுது எதுவும் செய்யவில்லை, தற்பொழுது எல்லாம் சொல்லி வருகிறார் அது குறித்து பார்க்கலாம் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | தமிழக அரசே குடிப்பதை ஊக்குவிக்கிறது... என்ன ஆகுமோ தெரியவில்லை: வானதி சீனிவாசன் ஆவேசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ