இன்று காலை முதல் திருமண விழாக்களில் மது பானங்கள் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதி வழங்கப்படாது. எந்த நிகழ்ச்சிகளிலிலும் மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி அரசு வழங்காது. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் - செல்லு ராஜூ
ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது. சென்னையில் ஐபிஎல் போட்டியில் அனுமதி வாங்கி உள்ளனர். மின் பயன்பாட்டின் உச்சபட்ச தேவை இருந்தாலும், இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளது. சில பேர் அரசின் மீது அவதூறு பரப்ப பொதுவான கருத்தை பரப்புகின்றனர். ஒருவர் ட்விட்டரில் புகார் போடும் பொழுது மின் இணைப்பு என்னுடன் பதிவிட வேண்டும். மின் இணைப்புடன் பதிவிட்டால் இரண்டு நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தேவை எந்த பாதிப்பும் இல்லை சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது. ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கும் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. குறைந்தபட்ச அறிவு கூட மண்டையில் இல்லாமல் வெளியீடு செய்துள்ளார். சொத்துக்கள் கணக்கில் உள்ளது. சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது தானே. வார்த்தை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ள சொல்லுங்கள்.
திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குறுகிய காலத்தில் டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மூன்று மாதத்தில் மட்டும் ரூ.1,312 கோடி சேமிப்பு உருவாகி இருக்கிறது. கோடைக்காலத்தில் எவ்வளவு மின்தேவை ஏற்பாட்டாலும் அதை சமாளிப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக இருக்கிறது மின்தேவையைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ