பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வருக்கு வந்த மக்கள் வேண்டுகோளின் பேரில் நல்லதங்காள் மற்றும் கரிக்கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திரந்துவிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...


"திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் நீர்த்தேக்கத்திலிருந்து 19.1.2018 முதல் 30.1.2018 வரை தகுந்த இடைவெளிவிட்டு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள 4831.36 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரிக்கோயில் நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்று பாசனம் மற்றும் கால்வாய் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கரிக்கோயில் நீர்த்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகள் பயன்படும் வகையில் 20.1.2018 முதல் அணையின் வலது மற்றும் இடது மதகுகள் மூலம் தினசரி வினாடிக்கு 40 க.அடி 12 நாட்களுக்கு சுழற்சி முறையில் சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.


மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்"


என குறிப்பிட்டுள்ளார்.