நண்பரின் கனவை நனவாக்கும் செல் முருகன் - விவேக் நினைவு நாளில் தொடங்கப்பட்ட திட்டம்
விவேக்கின் முதலாமாண்டு நினைவுதினைத்தை முன்னிட்டு க்ரீன் கலாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் விவேக் ஒருவர். தனது நகைச்சுவைகளில் பொது கருத்தையும், முற்போக்கு கருத்தையும் தவறாமல் கூறியவர். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்தச் சூழலில் அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் இன்று திறந்துவைத்தார்.
மேலும், அவரது கனவை நனவாக்கும் விதமாக க்ரீன் கலாம் என்ற திட்டத்தை நடிகரும், விவேக்கின் நண்பருமான செல் முருகன் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். இதன் கீழ், விவேக்கின் கனவான ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்!
இந்த நிகழ்வில் நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நண்பர் மறைந்தாலும் அவரது கனவை மறக்காமல் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கும் செல் முருகனுக்கு பலரும் தங்களது பாராட்டை கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | அதிசய 'ஆகாய கல்'- ஆட்டைய போட பார்த்த கும்பல்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!