சிவகங்கை மக்களவை தொகுதியில் H.ராஜா, இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 


மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 


மேலும் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியச்செயலர் H.ராஜா போட்டியிடுகிறார். ஏற்கனவே தெரிவித்தபடி அவர் இன்று சிவகங்கை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அவர் தனது வேட்புமனுவை வழங்கினார்.