தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜக நிர்வாகிகள் இல்ல விழாவில் எச்.ராஜா கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், " முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ஹிந்தி தேசிய மொழி என்று பாராளுமன்றத்திலேயே உரை நிகழ்த்தி உள்ளார். அதற்கு அப்பொழுது கூட்டணியில் இருந்த திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் மற்றும் சில அமைச்சர்களின் வாரிசுகள் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை வளர்த்துக் கொண்டு தமிழை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதித்து தமிழை அளித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!


திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்ற பேசுவதற்கு அருகதை இல்லை. திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளார். தற்பொழுது சிறையில் உள்ள அவரை தமிழக காவல்துறை தலைவர் சென்று பார்த்தால் கைதி நம்பரை சொல்லி அழைப்பாரா? அல்லது சல்யூட் அடிப்பாரா?. ஜெயிலுக்கு செல்ல வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார். இது போன்று திமுகவில் கொலைகாரன், கொள்ளைக்காரன், ரவுடிகள் உள்ளிட்டவர்கள் இருப்பது தான் திமுக" என்றார். 


அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு , எதிராக பேசி வருவது குறித்து கேட்டபொழுது,
 அதிமுகவின் தலைமையில் இருக்கும் ஈபிஎஸ், பாரதிய ஜனதா கட்சியை பற்றி குறை கூறினால் மட்டுமே பதில் கூறுவேன். மற்ற முன்னாள் அமைச்சர்கள் பேசுவதற்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது என்றார். பாஜக கட்சி நடைப்பயணத்தை தவறுதலாக சித்தரிக்கும் youtube சேனல்களை கண்டிப்பதாக கூறினார். தற்பொழுது நடைபயணத்தின் போது பெண் கொடுத்த மனு கீழே கிடந்தது குறித்து கேட்ட பொழுது, அப்படி செய்தி பரப்பினவரை நேராக அழைத்து வாருங்கள் செவீட்டில் அரைவேன் என தெரிவித்தார். மேலும், அதிமுகவும் பாஜக கூட்டணி எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ