உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இஸ்லாமிய மக்களின் 5 கடைமகளில் ஒரு கடமையாக ஹஜ் புனிதப்பயணம் கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்லும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:


இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வருடம் தோறும் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கமான ஒன்று. இதற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கிவந்தது. 


ஹஜ் புனிதப்பயணத்திற்கு அரசு வழங்கிவந்த மானியம் ரத்து!


ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியத்தை திடீர் என்று நேற்று முதல் ரத்து செய்ததை அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது. ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். 


மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலைபொருந்தும். அரசாங்கம் வழங்கும் மானியம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக வழங்கவேண்டும். மதங்களை பார்த்து மானியத்தை வழங்குவதை தேமுதிக என்றைக்கும் வரவேற்காது. 


ஹஜ் மானியத்தின் உண்மை நிலை என்ன? 


பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்துசெய்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. 


எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


ஹஜ் பயணம் மத்திய அரசுடன் ஆலோசனை: ஓ.பிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு!!


இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியிருந்தார்.