இந்தியாவின் பல மாநிலங்களைப் போலவே சென்னை மெட்ரோவும் மக்களது போக்குவரத்து தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவிலும் (Karnataka), நம்ம மெட்ரோ என்ற பெயரில் மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கான வசதியான போக்குவரத்து வழியாக இருந்து வருகிறது. அங்கு, பர்பிள் லைன், கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 


இதுதவிர எல்லோ லைனில் ஆர்.வி.சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் தடம் மூன்றாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த வழித்தடம் வரும் மார்ச் 2022-குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த பணி நிறைவடைந்தவுடன், பொம்மசந்திராவிலிருந்து தமிழகத்தில் உள்ள ஓசூர் வரை மெட்ரோ ரயில் தடத்தை நீட்டிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். விரைவில் ஓசூர் வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்படும் என தற்போது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் (Metro Rail) திட்டத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: முதலமைச்சரான பின் முதன்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்


இது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டுத் தொடரின் போது கிருஷ்ணகிரி எம்.பி, அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். இது மட்டுமின்றி காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ், பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். மேலும், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


ஓசூர் (Hosur) தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். அலுவலகம், பள்ளி, கல்லூரி, வணிகம் என தினமும் ஓசூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெங்களூருவிற்கு செல்கிறார்கள். பெங்களூருவில் பணிபுரியும் பலர் ஓசூரில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இவர்கள் பேருந்துகள், பாசஞ்சர் ரயில்கள், கேப் வசதிகள் என இவற்றையே நம்பி உள்ளனர்.


இந்த நிலையில், மெட்ரோ ரயில் பற்றிய செய்தி ஓசூர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


ALSO READ: எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR