சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் மட்டுமல்ல, சென்னை போன்ற நகரங்களிலும் இளவட்டக்கல் தூக்குவது போன்ற வீரத்தை காட்டும் போட்டிகள் நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. சென்னையை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சி சார்பில் மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஏற்பாடு செய்திருந்த இந்த சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களுடம், மண் பானையில் பொங்கலிட்டு,  ஜாதி மதம் பேதமின்றி ஒன்றிணைந்து மாட்டு பொங்கலைகொண்டாடினர். 


இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் 120 கிலோ, 80 கிலோ என இரு பிரிவில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. பொதுவாக பொங்கல் பண்டிகையில் கிராமப்புறங்களில் இளவட்டுக்கள் தூக்கும் போட்டி நடைபெறும், சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஆர்வமாய் பார்க்க வந்து குவிந்த மக்கள், செல்போனில் அந்த காட்சியை ஆர்வமாக படம் பிடித்தனர். 


மேலும் படிக்க | உயிரே போனாலும் விதைநெல்லை உணவாக்கி உண்ணமாட்டார்கள், உழவர்கள்!


பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி, திருக்கடையூர் என பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி ஆலயத்தில்,  முருகப்பெருமான் வள்ளி- தெய்வயானையுடன் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீதி உலா புறப்பட்டார். 


சன்னதி தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வீதி உலா புறப்பட்டார், திருத்தணியில் முக்கிய வீதிகளில் அனைத்து இடங்களிலும் சாமி தங்கள் வீடு அருகே வந்ததால் வண்ணக் கோலங்கள் இட்டு முருகப்பெருமானை வரவேற்றனர்.  


ஆகம விதிகளை மீறி முருகப்பெருமானுக்கு வீதி உலா புறப்படும் போது திருக்குடை இல்லாமல் சாமி ஊர்வலம் புறப்பட்டு உள்ளது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.  


மேலும் படிக்க | பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில்  தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.


பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம், கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்தது  இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான இன்று, மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுகிறது. கரிச்சான், நடு, பெரிய குதிரைகள் வண்டிகள், சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகள் மற்றும் புதுக் குதிரை வண்டிகளுக்கான பந்தயத்தை பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம் முருகன்  காலை 8:30 மணிக்கு  மணிக்கு தொடங்கி வைத்தார்.


10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த பந்தயத்தில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடித்த குதிரை மாடு வண்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுடன் விழா குழு தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் - அடக்கும் காளையர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ