நாடு முழுவதும் மாநிலங்களில் இருக்கும் சுகாதார உட்கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு நடத்திய நிதி அயோக், அதன் நான்காம் கட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் சிறந்த சுகாதாரவசதி மற்றும் உட்கட்டமைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா (Kerala) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு (Tamilnadu) 2ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த முறையும், இவ்விரு மாநிலங்களே முதல் இரு இடங்களையும் பிடித்திருந்தன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கேரளா சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு 82.20 புள்ளிகளையும், தமிழகத்துக்கு 72.42 புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 69.66 மதிப்பெண்கள் பெற்ற தெலுங்கானா 3-வது இடத்திலும், 69.95 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் ஆந்திராவும் இருக்கின்றன. இதனடிப்படையில் பார்க்கும்போது முதல் 4 இடங்களையும் தென் மாநிலங்களே பெற்றுள்ளன. 5வது மற்றும் 6வது இடங்கள் முறையே மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெற்றுள்ளன. அதற்கு அடுத்த இடங்களை ஹிமாச்சல், பஞ்சாப், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.


ALSO READ | இலவச TNPSC பயிற்சிக்கு இணையதளம்; நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு


நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் 30.35 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வரும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR