Northeast Monsoon Latest News: வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடையும் என்றும், அதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21 மாவட்டங்களில் மழை பெய்யும்


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 19) விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல செய்யல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதுச்சேரியில் கனமழை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 


சென்னை வானிலை பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை


சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல நாளை மறுநாள் வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.


மேலும் படிக்க - மழையை எதிர்கொள்ள நீலகிரி தயார்! மு.பெ.சாமிநாதன் நம்பிக்கை


மேலும் படிக்க - இன்னும் கடலில்தான் இருக்கு... அலர்ட்டா இருக்கணும்!


மேலும் படிக்க - திராவிட நல் திருநாடு... 'இது தற்செயலானது என தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?' ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ