தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை: தமிழகத்தில் நிலவுகின்ற வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை (Chennai) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்கள்.
மேலும் அதிகபட்சமாக நகரின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதாலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதாலும் மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | Himachal Pradesh-ல் பயங்கர நிலச்சரிவு: 4 வாகனங்கள் புதைந்தன, 45 பேரைக் காணவில்லை!
ALSO READ | Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR