தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்!
புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்!
தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது, "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை தஞ்சை, அரியலூர், நாகை சிவகங்கை மதுரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு லட்சத்தீவு, மாலத்தீவு மற்றம் அதனையொட்டிய இந்தியப்பெருங்கடலில் சூறைகாற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".