சென்னையில் கன மழை, நாளையும் தொடரும் என கூறுகிறது IMD!!
கடந்த வாரம் பெய்த மழைக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு, இன்று காலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது.
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, நவம்பர் 12 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த வாரம் பெய்த மழைக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு, இன்று காலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது. பிராந்திய வானிலை ஆய்வு மையம் சென்னையில், குறிப்பாக நவம்பர் 11-12 ஆம் தேதிகளில் அதிக மழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ALSO READ: பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!
"வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரைலிருந்து இலங்கை கடற்கரை வரை உள்ள பகுதிகளில் உள்ள கீழ் அடுக்கு அழுத்தம் மற்றும் மேற்கு நோக்கிய இயக்கம் காரணமாக, 2020 நவம்பர் 11, 12 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திராவில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை மற்றும் அதிக மழைக்கான வாய்ப்புள்ளது" என்று IMD கூறியிருந்தது.
மேலும், "இந்த வாரத்தில் தென்கிழக்கு இந்தியாவை ஒரு புதிய காற்றழுத்தம் பாதிக்கக்கூடும். அதன் தாக்கத்தால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய பகுதிகளில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் கடலோர ஆந்திரா மற்றும் யானமின் நவம்பர் 15 ஆம் தேதியும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளன" என்றும் IMD தெரிவித்துள்ளது.
சென்னையில் (Chennai) சேபாக், கோடம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, டி.நகர், சைதாபேட்டை, குரோம்பேட்டை மற்றும் கிண்டி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதற்கிடையில், நகர புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
ALSO READ: தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப் படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: PMK
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR