வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டப் பின்னர் தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இன்று மாலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின்  பல இடங்களிலும் நல்ல மழை கொட்டித் தீர்தது.


குறிப்பாக போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே, சென்னையில், மாலை வேளையில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து சென்னை முழுவதும் குளிர்சியான நிலை உலாவி வருகிறது.


இதேப்போல் கேரளாவின் எர்னாகுலம், இடுக்கி, ஆலப்புழா, வைநாடு ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.