காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் பலத்த பாதுகாப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் அதிகளவில் மக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் அதிகளவில் மக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மெரினா மற்றும் பெசன்ட் கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும். இதனால் அங்கு தடுப்பு வேலிகள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வரும் 17ஆம் தேதி காணும் பொங்கலன்று அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி, கோவளம், முட்டுக்காடு, எம்.ஜி.எம்.,மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட்நகர், பிராட்வே, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் ஆகிய பகுதிகளுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.