இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அமல்படுத்தப்படும் என உறுதி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை பொதுமக்கள் பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், "இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட், அதே போன்று கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை காவல்துறை மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். 


தொடர்ந்து நடந்த வழக்கின் இன்றைய விசாரணையில், நீதிமன்றம் உத்தரவிடும் அதனை தமிழக அரசு செயல்படுத்தாமல் உள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் பதிலளித்த டிஜிபி ராஜேந்திரன், "இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது விரைவில் அமல்படுத்தப்படும். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்


இதையடுத்து, பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர  உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.