உளவுத்துறை எப்படி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு வெப் சீரிஸ், தி பேமிலி மேன். இதன் முதல் பாகம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. இந்தி மொழியில் வெளியான The Family Man Season -2 தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான போது அதற்கு விமர்சனங்கள் எழுந்தன. தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் முன் வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்த முன்னோட்டத்தில் ராணுவ சீருடை அணிந்த சமந்தா, பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருந்ததால், எதிர்ப்புகள் எழுந்தன. 


இலங்கை தமிழர்கள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் சித்தரிக்கப்படுவதாகக் கூறி, த்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அமேசான் மற்றும் அவர்களின் பிரைம் வீடியோ சேவையை புறக்கணிப்பதாக அச்சுறுத்தும் அளவிற்கு சிலர் சென்றனர். 


Also Read | Family Man-2: இந்தி சீரியலை நிறுத்த தமிழ்நாட்டில் போர்க்கொடி ஏன்? காரணம் இதுதான்


இறுதியில், தொடர் எந்த இடையூறும் இல்லாமல் வெளியிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கும் இந்தத் தொடர் பல்வேறு தரப்பில் இருந்தும் சிறந்த விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதோடு, இந்திய OTT லேண்ட்ஸ்கேப்பில் ஒரு டிரெண்ட்-செட்டராக மாறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.


ஃபேமிலி மேன் 2 ஐப் பார்த்த இலங்கைத் தமிழர்களில் பலர் “இது ஒரு அற்புதமான புனைகதை திரில்லர்” என்று சொன்னால், வேறு சிலரோ, சீரியலின் சில பகுதிகளை விரும்பவில்லை.  ஆனால் இந்த உளவு-திரில்லர் சீரியலை தடை செய்யும் அளவுக்கு மோசமாக எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். 


வெற்றிகரமான முதல் பாகத்திற்கு பிறகு இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேமிலி மேன் 2 தொடருக்கு இலங்கையில் அந்த அளவு எதிர்பார்ப்பு இல்லை. பெரும்பாலான இலங்கை தமிழர்களுக்கு இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை. ஆனால் டிரெய்லர் வெளியான பின் ஏற்பட்ட பரபரப்பால் பலர் இரு பாகங்களையும்  ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றனர்.  


Also Read | Selvaraghavan: துப்பாக்கியுடன் செல்வராகவன்; புகைப்படம் வைரல்


சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஸ்ரீ இலங்கை தமிழரான ஐ.எஸ்.குமாரன் கருத்துப்படி, ஃபேமிலி மேன் தொடர் புனைகதை படைப்பு. படைப்பு சுதந்திரத்தின் அடிப்படையில்  வெகுஜன மக்களின் பொழுதுபோக்குக்காக தொடர் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் நம்புகிறார்.


The Family Man தொடரின் இரு பாகங்களையும் பார்த்த அவர், இந்த சீரியல், இலங்கைப் போரின் பதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி மட்டும் பேசவில்லை என்று கூறுகிறார். "ராஜி (சமந்தா) என்ற கதாபாத்திரத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட கொடூரமான கொடுமைகளைப் பற்றி பேசுகிறது; இலங்கை அரசாங்கத்தையும், போரைப் பற்றிய ராணுவத்தின் எண்ணப்போக்கையும் அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் மத்திய-மாநில அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தோ-சீனா புவிசார் அரசியல் நாடகம் (Indo-China geopolitical play in the Indian Ocean region) பற்றியும் இந்தத் தொடர் விவாதிக்கிறது” என்று அவர் கூறுகிறார்.


Also Read | Madhavan as villan: லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனா?


அதேபோல், இலங்கைத் தமிழர் சுதந்திரப் போராட்டத்தை (Lankan Tamil freedom struggle) இந்தத் தொடர் குறைத்து மதிப்பிடவோ அவமதிக்கவோ இல்லை என்பது உறுதி என்று சொல்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இலங்கைத் தமிழர். அதுமட்டுமல்ல, துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை இனத்தின் போராட்டத்தை இந்தத் தொடர் காட்டுகிறது என்று அவர் சொல்கிறார். 


"இந்தத் தொடரில் கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதி (terrorist) என்ற அழைக்கவில்லை, அவர்கள் போராளிகள் (rebels) என்று அழைக்கப்படுகின்றனர்" என்று அவர் ஜீ மீடியாவிடம் தெரிவித்தார்.


இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக அரசு தங்களது சொந்த நோக்கங்களை பூர்த்தி செய்ய விளையாடிய அரசியல் விளையாட்டுகளை இந்தத் தொடர் சித்தரிக்கிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.


Also Read | Sweet Surprise: கதாநாயகியாவதற்கு முன்பே தமிழ் படத்தில் சாய் பல்லவி entry


ஆனால், கொல்லப்பட்ட LTTE தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதத்தில் அவருக்கு திருப்தியில்லை. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து போராடி விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரபாகரனின் தலைமையையும் அதிகாரத்தையும் கருத்தில் கொண்டு, அந்த கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக காட்டியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். 


நடிகை சமந்தாவின் கதாபாத்திரத்தை பாராட்டும் அவர், எல்.டி.டி.இ பெண்கள் பிரிவு (LTTE women cadre) மிகுந்த திறன் வாய்ந்ததாக இருந்தது. அதை தொடர் சரியாக சித்தரித்திருப்பதாக அவர் கூறுகிறார். பெண் விடுதலைப் புலிகள், தங்கள் சுய மரியாதையை உயர்த்திக் கொண்டார்கள் என்றும், தங்கள் பணியை நிறைவேற்ற "எதையும்" (தொடரில் இரண்டு நிகழ்வுகளில் சித்தரிக்கப்படுவது போல்) செய்ய மாட்டார்கள் என்றும் அவர் நம்புகிறார்.


"போராளிகளின் தலைவர் (LTTE பிரபாகரன்) வெளிநாட்டிற்கு தப்பிப் போய் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவராக காட்டியுள்ளது எப்படி என்பது புரியவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் தனிமனித ஒழுக்கம் கடுமையாக பின்பற்றப்பட்டது, மது அருந்துவதும் தடை செய்யப்பட்டது” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் ஜீ மீடியாவிடம் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் தொடர் கவனிக்கத்தக்கது என்றும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் இந்தத் தொடரை தடை செய்ய கோரிக்கை விடுத்ததில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அவர் கருதுகிறார்.


Also Read | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்


ஆனால், ஃபேமிலி மேன் தொடர் புனைகதை என்று தயாரிப்பாளர்கள் தெளிவாக கூறியிருந்தனர். இந்தத் தொடரில் வரும் கதாபாத்திரங்களுக்கும், உயிருடன் இருக்கும் நபர்கள் / இறந்த நபர்கள் மற்றும் உண்மையான நிகழ்வுகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்தால் அது முற்றிலும் தற்செயலானது, என்ற வழக்கமான ‘பொறுப்பு துறப்பு’ (கற்பனைக் கதை என்ற) அறிவிப்பு தொடரில் இடம் பெற்றிருந்தது.  


ஆனால், போராளிகளின் உருமறைப்பு சீருடை (camouflage uniform), சயனைடு காப்ஸ்யூல் தாயத்துகள் (cyanide capsule neckbands), (1991ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தற்கொலை வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டது) போன்ற காட்சிகள், விடுதலைப் புலிகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றன. 


Also Read | Mirchi FM: RJவாக புதிய அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் அர்ச்சனா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR