Madhavan as villan: லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனா?

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் என்று அறியப்படும் மாதவன், இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாக அண்மை நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2021, 02:26 PM IST
  • லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனா?
  • விளக்கமளிக்கிறார் மாதவன்
  • இரு மொழிகளில் தயாராகிறது லிங்குசாமியின் திரைப்படம்
Madhavan as villan: லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனா? title=

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் என்று அறியப்படும் மாதவன், இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாக அண்மை நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மாதவன் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. அதிலும் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கதையின் படி, வில்லன் கதாபாத்திரமும், கதாநாயகனுக்கு சமமானதாக இருக்கும் என்றும், எனவே மாதவன் வில்லனாக அவதாரம் எடுப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்தப்படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்று மாதவன் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

மாதவன் ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் ‘ரன்’, ‘வேட்டை’ படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘சண்டைக்கோழி 2’. அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, வசூலிலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 

ஆனால், இயக்குநர் லிங்குசாமியின் திரைப்படங்கள் பரவலாக அனைவராலும் விரும்பப்படும் திரைப்படங்களாகவே இருக்கும். தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் இருமொழி திரைப்படமாக உருவாகிறது.

தெலுங்கு முன்னணி நடிகர்  ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read | தாநாயகியாவதற்கு முன்பே தமிழ் படத்தில் சாய் பல்லவி entry

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News