₹100 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.  சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இலங்கை தமிழர்களை சென்னையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் (NCB) கைது செய்துள்ளனர். இந்த இருவரும் தங்கள் உண்மையான அடையாளத்தை மறைத்து சென்னையில் வசித்து வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையால் தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட “ஷெனயா துவா” (Shenaya Duwa) என்ற போதைப் பொருள் நிறைந்த கப்பல் தொடர்பான வழக்கு. துராயா செயற்கைக்கோள் தொலைபேசி அமைப்பு தவிர, 99 பாக்கெட் ஹெராயின், 20 பெட்டிகள் சிந்தடிக் மருந்துகள் மற்றும் ஐந்து 9 மிமீ கைத்துப்பாக்கிகள் கப்பலில் மிக தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. 


அதன்பிறகு, கராச்சியில் இருந்து ஒரு பாகிஸ்தான் (Pakistan) படகு மூலம் இலங்கை கப்பலான ‘ஷெனயா துவா’ கப்ப்லுக்கு மருந்துகள் மாற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பலின் ஆறு பேர் கொண்ட குழு உடனடியாக கைது செய்யப்பட்டது. ஆனால் முக்கிய சதிகாரர்களைத் தேடும் பணி தொடர்ந்தது.


இதன் மூலம் இலங்கை (Srilanka) நாட்டை சேர்ந்த MMM. நவாஸ் மற்றும் முகமது அஃப்னாஸ் ஆகியோரை சென்னையிலிருந்து கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஈரானிய கப்பல்களில் இருந்து போதைப்பொருட்களை கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்று டெலிவரி செய்யும் பன்னாட்டு நிலையிலான ஹெராயின் கடத்தல் பணியில் நவாஸ் மற்றும் அஃப்னாஸ் முக்கிய பதவிகளை வகித்ததாக போதை பொருள் கட்டுபாட்டு பிரிவு கூறியது.


இலங்கை அதிகாரிகளும் இவர்களை கைது செய்ய முயன்றதை அடுத்து, அவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நவாஸுக்கு எதிராக இலங்கை அரசு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது.


ALSO READ | Bank லாக்கரில் பணம் வைக்கும் பழக்கம் உள்ளதா.. அப்படீன்னா இதை கண்டிப்பா படிங்க..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR