சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றிய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு கடந்த ஆக., 2-ஆம் நாள் அரசாணை வெளியிட்டது. இந்த முடிவிற்கு தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலம் சமூக ஆர்வளர் டிராபிக் ராமசாமி அவர்கள் தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதேப்போல் வழங்கறிஞர் யானை ராஜேந்திரன் அவர்களும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கறிஞர் யானை ராஜேந்திரன் அவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றிய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவு அளித்தமைக்கு அளிக்கவும் தமிழக அரசிற்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை CBI-க்கு ஒரே நாளில் மாற்றிய தமிழக அரசு, ஓராண்டாக உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து CBI விசாரணைக்கு பரிந்துரை செய்தமை குறித்து பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.


#Idol Theft Case... சிலை கடத்தல் வழக்குகளை IG பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வந்தது. வேலூர் கோவில் சிலை திருட்டை கண்டுபிடித்த இவர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தவர்.


இவரது தலைமையிலான விசாரணை குழுவிடம் இருந்து இந்த வழக்கினை CBI விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் உள்பட தமிழக கட்சி தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.