“மாணவர்கள் கல்வியை கற்றால் மட்டும் உயர முடியாது..” உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேச்சு!
உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், மாணவர்கள் கல்வியை மட்டும் கற்றால் உயர முடியாது என பேசியுள்ளார்.
ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் அரியூர் மலைக்கோடியில் வித்யா நேத்ரம் கல்வி சார்பில் 200 மாணவ,மாணவிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் உதவிதொகை வழங்கப்பட்டது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு பேசினார்.
வேலூர் மாவட்டம்,அரியூர் தங்க கோவில் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் 200 மாணவ,மாணவிகள் உயர் கல்வி பெற ரூ.1.50 கோடி மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கும் வித்யா நேத்ரம் விழா நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கலந்துகொண்டு கல்வி உதவிதொகையினை வழங்கினார் இவ்விழாவில் ஆன்மிக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேசுகையில் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் கல்வியில் ஆர்வம் செலுத்தி படிக்க வேண்டும் ஆனால் கல்வி கற்றால் மட்டும் போதாது நல்ல ஒழுக்கத்தினையும் மாணவ,மாணவிகள் கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என பேசினார்.
மேலும் படிக்க | வேலூர்: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரோன்கள்-பலூன்கள் பறக்க தடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ