வேலூர்: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரோன்கள்-பலூன்கள் பறக்க தடை!

CM Stalin Visit to Vellore: வேலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2023, 05:36 PM IST
  • முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் செல்கிறார்.
  • இதனால் பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சென்னயில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
வேலூர்: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரோன்கள்-பலூன்கள் பறக்க தடை!  title=

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூரில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  

இந்நிலையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க காவல்துறை தடவித்துள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ள அண்ணாசாலை, மேல்மனவூர் இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் பள்ளிகொண்ட கந்தனேரி ஆகிய பகுதிகள் "நோ ஃப்ளையிங் ஜோன்" பகுதியாக அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (IG), 3 காவல்துறை துணைத் தலைவர்கள் (DIG), 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் சுமார் 3000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண்: காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு

காரணம் என்ன..?

பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக  முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சியில் ட்ரோன்கள் பறக்கவும் ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

சென்னையிலும் ட்ரோன்கள் பறக்க தடை!

வேலூரில் முதல்வர் ஸ்டாலினின் வருகையால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக சென்னையிலும் ட்ரோன்கள் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. காரணம், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது. ஆதலால், சென்னையில் கடந்த 17ஆம் தேதி (நேற்று) முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னையை தொடர்ந்து வேலூரிலும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கட்டணமில்லா பேருந்து பயணம்... புதுமைப்பெண் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை.. அசத்தும் திமுக அரசு! ஓர் அலசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News