கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக 6 வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களுக்கு என்று புராதான சொத்துக்கள் கேட்பாரற்ற நிலையில் பல இடங்களில் சிதரிக்கிடப்பதாக சர்ச்சை எழுந்து வந்த நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரனைக்கு வந்தது. 


இதையடுத்து, இது தொடர்பாக இன்னும் ஆறு வாரங்களில் கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


கோவில் நிலங்களை மீட்டு சந்தை முறைப்படி குத்தகைக்கு விடப்பட வேண்டும் என்றும், தற்போது அந்த நிலத்தை யாரவது ஆக்கிரமித்துக்கொண்டு கொடுக்க மறுத்தால் அவகளிடமிருந்து அந்த கோயில் நிலத்தை பெற்று குத்தகைக்கு விடப்படவும் இவற்றை செயல் படுத்தவே இன்னும் ஆறு வாரத்திற்குள் ஒரு தனிக்குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்த்தரவிட்டுள்ளது.