இனி தமிழக பள்ளிகளிலும் மறைமுக இந்தி தினிப்பு!
இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நவோதயா பள்ளிகளுக்கு இதுவரை தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை, காரணம் மறைமுகமாக இந்தி மொழி மாணவர்களிடையே தினிக்கப்படுகிறது என கருதப்படுகிறது. ஆனால் தற்பொழுது இந்த நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நவோதயா பள்ளி 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளியாக தொடங்கப்பட்டது. கிராமப்புறம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வியை வழங்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களில் தற்போது இந்த பள்ளிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கிவருகின்றது.
முன்னதாக மேற்கு வங்காளம் மாநிலத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் மேற்குவங்காளத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவ அனுமதி பெற்றது.