நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பி்முகரை தாக்கியதாக கைதாகி, மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை ஆணை வழங்கியது. இதனையடுத்து நேற்று மாலை அவர் விடுவிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 6 மணியானதால் சிறைத்துறை விதிகளின்படி பிணையில் விடுவிக்க இயலாது என கூறப்பட்டதையடுத்து இன்று காலையில் சென்னை புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!


அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்து விட வேண்டும், கழக முன்னோடிகள் மீது வழக்குகள் போட்டு அழித்து விடலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு எதுவும் நல்லது செய்யாமல், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஒரே ஒரு வேலையாக அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என விமர்சித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், சேடிஸ்ட், பாசிஸ்ட் எனவும்,  ஹிட்லர் முஸோலினியின் மறுஉருவம் தான் ஸ்டாலின் எனவும் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். 



ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் தம் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகர் மீது ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சியது, செயின் பறிப்பு உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்திய ஜெயக்குமார், சட்டத்துக்கு புறம்பான செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைபோவது வேதனையான விஷயம் எனவும் கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட சிறைத்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | சசிகலா அவர்களே வருக.. ஓபிஸ்-ஈபிஸ் அவர்களே வெளியேறுக -ஒன்றுகூடும் அதிமுக நிர்வாகிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR