ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் சட்டத்தை மீறக்கூடாது என தமிழிசை கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது மக்களும், பொது நல அமைப்புகளும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி சாலிகிராமத்தில் உள்ள சாலையில் செல்லும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவார்கள். 10-வது ஆண்டான இன்று காலை 5 மணி முதல் 8 மணி வரை அந்த பகுதி வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து பரிசும் வழங்கினார்கள். அதை அந்த பகுதியில் வசிக்கும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை வழங்கினார்.


பிறகு அவர் கூறியதாவது:-


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வலுவான முறையில் தடை போடப்பட்டதால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, கடந்த முறை அரசாணை பிறப்பித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த அனுபவத்தின் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற உணர்வு இருப்பதால் தான் வலுவான ஆதாரங்களுடன் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுகிறது.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் குவிவதும், அவர்களது உணர்வும் வரவேற்கத்தக்கது. அதற்காக சட்டத்தை மீறக்கூடாது. சட்ட அங்கீகாரத்துடன் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் போது எதிர்மறையாக ஏன் நினைக்க வேண்டும். சட்டரீதியாக அணுகி நிச்சயம் அனுமதி பெறுவோம் என அவர் கூறினார்.