சென்னையில் நேற்று 4 மணி நேரத்திற்கும் மேல் பெய்த திடீர் கனமழையால் சென்னை சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை,ராஜாஜி சாலை உள்ளிட்ட  முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன நெரிசல் காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்ததாலும் அலுவலகத்தில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடர்ந்து குவிந்ததால் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம்


இதனிடையே அரசு நிகழ்ச்சிகளுக்காக தஞ்சை மற்றும் திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும் நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் என தெரிவித்த அவர் நள்ளிரவில் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.




மேலும் பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்


இந்த நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று (31.12.2021) ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ |  TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR