புது டெல்லி: கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home Minister Amit Shah) அவர்கள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று வெளியான தகவலின் அடிப்படையில், அமைச்சர் அமித் ஷா (Amit Shah health condition) நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என்பதால், எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அங்கிருந்தே அலுவலக பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ALSO READ | கொரோனா நோய்தொற்றில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்


நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை முன்பை விட சிறப்பாகவும் மற்றும் மெதுவாக முன்னேறி வருகிறது. அவர் முழுவதும் குணமடைந்து பிறகு விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவார்.


முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர், குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து குணமாகி வந்த அவருக்கு சோர்வு மற்றும் உடல் வலி ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் தனது உடல்நிலை பராமரிப்புக்காக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.