ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்
ஓசூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை மிரட்டி 2 காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பெண் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் பீமாண்டப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கணவருடன் சேர்ந்து பெல்லட்டி கிராமத்தில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த வாரம் 4ஆம் தேதி சூளகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் தன்னை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சூளகிரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிவரும் முருகானந்தம் மற்றும் மாரியப்பன் இருவரும் இளம்பெண் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்போது இளம்பெண்ணிடம் இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதுடன், பணம் தரவில்லை என்றால் தாபா உணவகத்தில் கர்நாடக மாநில மது பானங்களையும், கஞ்சா பொட்டலங்களை வைத்து வழக்குப்பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
அதில், மிரட்டலோடு மட்டும் விட்டுவிடாமல் இளம்பெண்ணை காவலர்கள் இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் போலீசில் புகாரளித்தார். இந்த நிலையில் இந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் மாரியப்பன் மற்றும் முருகானந்தம் இருவர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலாத்காரம் செய்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.500 லஞ்சம்..!
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் தவறு யார் செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் அளித்த புகாரை புரம் தள்ளாமல் இரண்டு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அனைத்து காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு "கண்ணியம்" திட்டம் விரைவில் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR